Wednesday, January 4, 2012

மிகை ஊதியம் (பொங்கல் போனஸ்) அரசானை

தமிழக அரசு அறிவித்துள்ள 2012 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (பொங்கல் போனஸ்) அரசானை  டவுன்லோட் செய்ய கீழே கிளிக் செய்க‌

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் (BONUS) வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

ஒளிவு மறைவற்ற, திறமை மிக்க மற்றும் பொறுப்புள்ள நிர்வாகத்தை அளிப்பது தான் ஒரு நல்ல அரசின் இலக்கணம் என்ற அடிப்படையில்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.   அரசால் வகுக்கப்படும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களை சென்று அடைய அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுபவர்கள் அரசு ஊழியர்கள்.அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகளும் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு  உதவிகரமாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம்   (Bonus)  வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.